Friday, June 26, 2009

சர்வம் - விமர்சனம்

சரி....... சரி...... கடைசியா ஒரு இங்கிலீஷ் படம் பார்த்திருக்கீங்க ....
அது உங்க மனசை பாதிச்சிருக்கு .... அதை உடனே சுட சுட தமிழ்ல சுட்டு சர்வம் னு பேரை வைச்சு ரிலிஸ் பண்ணிட்டிங்க ... விடுங்க இவ்வளவுதான் மேட்டர் .....

தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு , இந்த தரை டிக்கெட்டின் தாழ்மையான விண்ணப்பம் . இங்கிலீஷ் படத்தை காப்பி அடிங்க ... வேண்டாம்னு சொல்லலை. இங்கிலீஷ் படம் மாதிரியே ஒரு மணி நேரத்தில் கதை சொல்ல பழகுங்க .ஒரு மணி நேர இங்கிலீஷ் படத்தை இரண்டு மணி நேர தமிழ் படமா மற்றனும்ன கொஞ்சம் மூளை வேணும் .... அதுதான் நம்மகிட்ட இல்லையே பிறகு ஏன் இந்த நீளமான ரிஸ்க் ..

சதா சர்வ காலமும் ஆர்யா , த்ரிஷா பின்னாடியே போய் i love you சொல்லுவதும்.... த்ரிஷா நோ சொல்லுவதும் .... ச்சே .. கதை ஒரு மணி நேரம் நகளவே மாட்டேங்குது .ஒரு வழியா த்ரிஷா கன்வின்ஸ் ஆனதும் கொஞ்ச நேரத்திலேயே பரிதபமாய் செத்துப் போறதும் , செத்துப்போன த்ரிஷாவின் இதயத்தை ஒரு சிறுவனுக்கு பொறுதும்னு சட சடன்னு சொல்லி முடிச்சிடுறாங்க ..... அப்புறம் அந்த சிறுவனை கொல்லணும்கிற வைரகியத்துல ஒரு வில்லன் . அதுக்கு ஒரு நொண்டி சாக்கு காரணம் . அந்த வில்லன் கிட்ட இருந்து சிறுவனை கப்பாதுறதுதான் ஆர்யாவுக்கு மிச்ச மீதி இருக்கிற வேலை .

உண்மையில் சொல்றேங்க ... படம் பார்க்க படு த்ரில்ல இருந்தது . .. பின்ன .... தரை டிக்கெட்ல நான் மட்டும் இருக்கேன் .பின்னாடி கண்ணுக்கு எட்டின துரம் வரைக்கும் ஆளே இல்லே ...

விஷ்ணு வர்தனுக்கு இன்னும் தமிழ் சினிமாவின் கெமிஸ்ட்ரி புரியவே இல்லை . ஆர்யா நான் கடவுளுக்கு பிறகு ஒரு நல்ல டிரக்கில போக வேண்டாமா ? ஆறுதலான விஷயம் ஒளிப்பதிவு மட்டும்தான் '.

மொத்தத்தில் சர்வம் .... கர்மம்



இப்படிக்கு

தரை டிக்கெட்

No comments:

Post a Comment